Skip to main content

ஐந்து வரி கவிதைகள் 17



.....!!!


கவிப்புயல் இனியவன்
மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
உன் இதயம் வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 01
கவிப்புயல் இனியவன்
நானும் நீயும் பிரிந்துவிட்டோம் ....
நீ என் நினைவுகளை மறந்து ....
நான் உன் நினைவுகளை மறந்து .....
வாழவே முடியாது - காதல் பிரிவை...
ஏற்படுத்தும் மறதியை ஏற்படுத்தாது ....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 02
கவிப்புயல் இனியவன்
என்இதயம் நீ இருக்கும் வரை துடிக்கணும் ....
கண்கள் உன்னை மட்டுமே பார்க்கணும் ....
உன் தெருவைநோக்கி கால்கள் நடக்கணும் ....
நம் காதல் உலகம் வரை இருக்கணும் ....
இல்லை- கல்லறையில் இருவரும் தூங்கணும் ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 03
கவிப்புயல் இனியவன்
நீ என் கவிதை அழகு என்கிறாய் .....
நீ அழகாய் இருப்பதால் கவிதை .....
அழகாக இருக்கிறது - நீ என்னை ....
பிரிந்துபார் கவிதை அழுது படி ......
உன் மடியிலேயே வந்து தூங்கும் ....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 04
கவிப்புயல் இனியவன்
என்னை நன்றாக காயப்படுத்து .....
உனக்கு அதில் இன்பமென்றால் ....
நன்றாக காயப்படுத்து -எதையும் ...
தாங்கும் இதயம் என்று சொல்லமாடேன் ....
உனக்கு இல்லாத இதயம் வேண்டாம் ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 05
கவிப்புயல் இனியவன்
நண்பா நட்பு ஒன்றுக்குத்தான் .....
நேற்று இன்று நாளை பொருந்தும் ....
காதலில் இதில் ஒன்று நின்றுவிடும் .....
நட்பு காவியங்களை காப்பியங்களை ....
நட்போடு வாசித்துப்பார் கண்ணீர் வரும் ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
நட்பு கவிதைகள்
கவிதை எண் 06
கவிப்புயல் இனியவன்
கிழிந்த
காட்சட்டையுடன் நப்புகொண்டோம்.....
இன்றுவரை கிழியாமல் இருக்குதடா .....!
அழகான உடையிருந்தால் காதல் வரும் .....
அசிங்கமான உடையிருந்தாலும் நட்புவரும் .....
நட்பு அழகை விட மனதை விரும்பும் .....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
நட்பு கவிதைகள்
கவிதை எண் 07
கவிப்புயல் இனியவன்
கண் பூத்து கண்பார்வை ......
குறைந்துபோகும்போதும் ......
கண்டவுடன் கட்டித்தழுவும் .....
ஒரே ஒரு உறவு நட்பு ..!!!
உலகில் புரியாத புதிர் நட்பு ....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
நட்பு கவிதைகள்
கவிதை எண் 08
கவிப்புயல் இனியவன்
நண்பா ..நான் வறுமை பட்டபோது ....
நீ வாங்கி தந்த ஆடை இன்றும் இருக்கிறது .....
எனக்கு அது புதைபொருள் பொக்கிஷம் ....
எத்தனை புது ஆடைஉடுத்தாலும் ....
உன் ஆடையின் அழகுக்கு நிகரில்லை ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
நட்பு கவிதைகள்
கவிதை எண் 09
கவிப்புயல் இனியவன்
ஐய்ம்பூதங்கலின் கருத்தை ....
ஐவகை நிலத்தை என்னால் ....
ஐந்து வரியில் விளக்கிடுவேன் ....
நண்பா நட்பை பற்றி என்னால் ....
ஜென்மம் எடுத்தாலும் விளக்க முடியாது ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
நட்பு கவிதைகள்
கவிதை எண் 10
செந்தில்
கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
கவிப்புயல் இனியவன்
மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
அம்மா - இறைவனின் உன்னத படைப்பு ....
அம்மா - இறைவனாக பார்க்கப்படும் பிறப்பு ....
அம்மா - ஒவ்வொரு இதயத்திலிருக்கும் சாமி .....
அம்மா - இன்ப துன்பத்தை தாங்கும் கடவுள் ....
அம்மா - எல்லா உயிரினங்களின் மூல கடவுள் ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள்
கவிதை எண் 11
கவிப்புயல் இனியவன்
தாயே உன்னை வார்த்தையால் .....
வரிகளால் அழைக்கும் போதும் .....
அம்மா என்று அழைத்த போதும் .....
உயிரில் அதிர்வு ஏற்படுகிறது ....
உயிரில் கலந்த உறவு தானே .....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள்
கவிதை எண் 12
கவிப்புயல் இனியவன்
தான் எங்கிருந்து வந்தேன் ....
என்பதை எனக்கு எடுத்துரைக்கவே .....
என்னை ஆலயத்துக்கு அழைத்து ....
சென்றார் அம்மா என்பதை ......
மக்கு மண்டைக்கு புரியவில்லை ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள்
கவிதை எண் 13
கவிப்புயல் இனியவன்
தன் தாயைப்போல் எல்லா ....
தாயையும் நினைப்பவன் ஞானி .....
ஆனால் எந்த தாயையும் -நீங்கள் ....
அம்மா என்று அழைத்துபாருங்க்கள் ....
உங்களை தன் குழந்தையாகவே பார்க்கும் .....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள்
கவிதை எண் 14
கவிப்புயல் இனியவன்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ....
எந்த மனகுழப்பமும் இல்லாமல் ...
எந்த வேறுபாடும் இல்லாமல் .....
அன்புவைக்கும் உயிர் வேண்டும் .....
தாயே அது உன்னால் மட்டுமே முடியும் ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள்
கவிதை எண் 15
செந்தில்
அம்மா கவிதைகள் அருமை அண்ணா
முரளிராஜா
@செந்தில் wrote:
அம்மா கவிதைகள் அருமை அண்ணா
ஒ நீங்க அந்த கட்சியை சேர்ந்தவரா புன்முறுவல்
செந்தில்
ஒ நீங்க அந்த கட்சியை சேர்ந்தவரா

________
அரசியலா?
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
கவிப்புயல் இனியவன்
அம்மா கவிதைகள் அருமை அண்ணா

எப்படி இருந்தாலும் அம்மா அம்மா தான்
கவிப்புயல் இனியவன்
சுட்டெரிக்கும் சூரியனை விட ......
உன் வார்த்தைகள் சூடானவை .....
வலிமை கொண்ட மலையை விட ....
உன் மனம் கடினமானது .......
பிரிவின் பெறுபேறு உணர்த்தியது ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல் தோல்வி கவிதை
கவிதை எண் 16
+++++
சொந்த மொத்தக்கவிதை = 6229
கவிப்புயல் இனியவன்
பிரிந்து பார்த்தேன் பிரிய முடியவில்லை ......
வெறுத்துப்பார்த்தேன் வெறுக்கமுடியவில்லை .....
மறந்து பார்த்தேன் மறக்கவும் முடியவில்லை ....
பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை .....
அதிகமாய் நினைப்பதற்கே அன்பே .....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல் தோல்வி கவிதை
கவிதை எண் 17
+++++
சொந்த மொத்தக்கவிதை = 6230
ஸ்ரீராம்
@கவிப்புயல் இனியவன் wrote:
பிரிந்து பார்த்தேன் பிரிய முடியவில்லை ......
வெறுத்துப்பார்த்தேன் வெறுக்கமுடியவில்லை .....
மறந்து பார்த்தேன் மறக்கவும் முடியவில்லை ....
பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை .....
அதிகமாய் நினைப்பதற்கே அன்பே .....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல் தோல்வி கவிதை
கவிதை எண் 17
+++++
சொந்த மொத்தக்கவிதை = 6230

சூப்பர் சூப்பர்


    Page 1 of 3

    Next

    Comments

    வருட பிரபல கவிதை

    தேனிலும் இனியது காதலே 23

    89-100) வலிக்கும் இதயம்

    முள்ளில் மலரும் பூக்கள்(60)

    பஞ்ச வர்ண கவிதைகள்

    முள்ளில் மலரும் பூக்கள்(62)

    முள்ளில் மலர்ந்த பூக்கள்(45)

    4) வலிக்கும் இதயத்தின் கவிதை