Skip to main content

89-100) வலிக்கும் இதயம்

 ஒவ்வொரு காதலனும் ....

முத்தமுட முன்னர் ...
விரும்புவது ....
காதலியின் தோளில்...
சாய்வதற்கே ....
ஏன் என்று 
கேட்டுப்பாருங்கள் ....
யாராலும் காரணம் ....
சொல்லிவிட முடியாது ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
என்னை உனக்கு ....
பிடிக்கவில்லையென்றால் ...
உண்மையாக என்னை ....
வெறுத்துவிடு ....!!!

பிடிக்கததுபோல் ...
நடிக்காதே - அது ....
என்னை கொஞ்சம் ...
கொஞ்சமாய் கொல்கிறது....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
வேண்டாமடி ...
என்னை காதலித்து விடாதே ....
நான் படும் அவஸ்தையை ....
நீயும் படாதே ....!!!

இதயத்தின் காயங்கள் 
உள்ளேயே இருப்பதால் ....
வெளியே தோன்றும் ....
அழகில் மயங்கி விடாதே ...!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
உனக்கு .... 
முதல் நான் ... 
இறந்தாலோ .... 
எனக்கு.... 
முதல் - நீ 
இறந்தாலோ .... 
நம் .... 
கல்லறையின் ... 
வாசகம் - " மீண்டும் 
காதலிப்போம் " .... 
அடுத்த ஜென்மத்தில் ...!!! 


கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
நான் 
உன்னை ஏமாற்றினால் ...
என்ன செய்வாய் ...
என்று விளையாட்டுக்கு ....
கேட்டபோதே ....
என் இதயம் இறந்து விட்டது ....!!!


கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
இரவே ...
விரைவாக வந்துவிடு ...
உன்னில் இருந்து ....
அழுவதே எனக்கு ....
சுகமாக இருக்கிறது ....!!!

மழையே ...
விரைவாக பொழிந்துவிடு ....
உன்னோடு சேர்ந்து ....
அழுவதே எனக்கு .....
பாதுகாப்பாக இருக்கிறது ...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நீ 
தரும் வலிகளை...
உன் முகத்துக்கு ...
சொல்ல முடியவில்லை ....
முடிந்தால் என் வரிகளை ....
பார் வலிகள் தெரியும் ...!!!

என்.... 
வரிகளை ....
வெறும் வரிகளாக ....
பார்க்காதே அந்த ...
வரிகளுக்கு ......
வலியாகிவிடும்...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நிஜமான வாழ்க்கை....
கிடைக்கவில்லை ....
கற்பனையில் என்றாலும் ....
வாழவிடு ....!!!

வாழ்ந்தால் 
உன்னோடுதான் ...
வாழ்வேன் அடம்பிடிகிறது ...
மனசு .......!!! 

மடிந்தால் ....
உன் நினைவோடு மடிவேன் ....
செத்து துடிக்கிறது ....
இதயம் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உன்னோடு ....
வாழவேண்டும் என்றுதான் ....
காதல் செய்தேன் ....
உன் மௌனம் என்னை ....
கொல்கிறது....!!!

உன்னோடு வாழவேண்டும் ...
என்பதெல்லாம் கலைந்து....
உன்னோடு பேசினால் ..
போதும் என்று ஏங்குகிறேன் ...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
வலிகள் மனதில் ....
வரும்போதேலாம் ....
மௌனமாக அழுவது ...
இதயம் .....!!!

உறவுகளை ....
வருத்த கூடாது ....
என்பதற்காக ....
போலியாய் சிரிக்கிறது ....
உதடு ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நீ ...
தந்த ...
வலிகளை தாங்கும் ....
சக்தி எனக்கில்லை ....
நீ தந்த வலிகள் ....
என்னவென்று என் ....
கவிதைகள் சொல்லும் ....!!!

ஒன்று ....
மட்டும் செய்துவிடாதே ....
நான் தனியே இருந்து ....
அழுவதுபோல் நீயும் ...
அழுதுவிடாதே - என்னை ....
ஆறுதல் படுத்த கவிதை ...
எப்போதும் இருக்கும் ....
உன்னை ஆறுதல் படுத்த ....
என்னை தவிர யாருமில்லை ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
ஒரு நாளுக்கு ....
ஒரு குறுஞ்செய்தியாகினும் ....
அனுப்பி வைத்துவிடு ....
உனக்கு அது  குறுஞ்செய்தி....
எனக்கு பெரும் செய்தி ....!!!

நீ 
நேரே வரவேண்டுமென்று ....
மனம் ஆசைப்படவில்லை ....
உன் நினைவில் வாழ்வே ....
ஆசைப்படுகிறேன் ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

பஞ்ச வர்ண கவிதைகள்

முள்ளில் மலரும் பூக்கள்(62)

முள்ளில் மலர்ந்த பூக்கள்(45)

4) வலிக்கும் இதயத்தின் கவிதை