Skip to main content

தேனிலும் இனியது காதலே 23

 பட்டாம்

பூச்சியின் அழகை .....
ரசித்தேன்......!!!

பூத்து குலுங்கும் ...
பூவை ரசித்தேன் ....
ஆயிரம் கனவுகளை ....
இரவில் ரசித்தேன் ..... !!!

என்னவளே ....
உன்னை ரசிக்கவில்லை
சுவாசிக்கிறேன் ....
உன்னை நினைப்பதில்லை ...
துடிப்பாக வைத்திருக்கிறேன் .....!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 01
கவிப்புயல் இனியவன்
மன்னித்துவிடு ....
உன் அனுமதி இல்லாமல் ....
உன்னை என் இதயத்தில் ....
குடியமர்த்தி விட்டேன் .....!!!

எனக்கு உன் அனுமதி ....
கேட்டெல்லாம் உன்னோடு ....
பேச முடியாது -நான் ...
நினைக்கும் போதெல்லாம் ....
உன்னோடு பேசவேண்டும்
என்பதால் இதயத்துக்குள் ....
உன்னோடு வாழ்கிறேன் .....!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 01
    கவிப்புயல் இனியவன்
    உனக்காக காத்திருந்து ...
    களைத்து விட்டேன் ..
    உன்னை இழக்க மாட்டேன் ...
    அடிக்கடி வருவாய் ... !!!

    நினைவிலும் கனவிலும் ...
    நிச்சயம் வருவாய் ....
    நினைவில் வரும் போது
    உன்னை ரசிப்பேன் ..
    கனவில் வரும் போது ....
    உன்னோடு பேசுவேன் ...!!!

    &
    கவிப்புயல் இனியவன்
    தேனிலும் இனியது காதலே
    காதல் கவிதை 03
    கவிப்புயல் இனியவன்
    விடிய விடிய காதல்
    கதை பேசினாலும்
    காலையில் என்னை
    எழுப்புவது என்னவோ
    உன்
    கைப்பேசி அழைப்பு....!!!

    இரவு இரவாய் .....
    எழுதிய கவிதைகள்
    அனைத்தும் ....
    விற்பனைக்கு அல்ல..
    உன் இதயத்தை ....
    காதல் பூவனமாக்க ....!!!

    &
    கவிப்புயல் இனியவன்
    தேனிலும் இனியது காதலே
    காதல் கவிதை 04
    கவிப்புயல் இனியவன்
    நீ
    மார்கழியில் தான் ....
    பிறந்தாயோ ...?
    உன்னை கண்டவுடன் ....
    உடம்பு சில்லென்கிறதே .....!!!

    நீ
    சித்திரையில் என்னை ....
    சந்தித்துவிடாதே ....
    கத்திரி வெயில்போல் ....
    சுட்டெரிதிடுவாய்.....!!!

    &
    கவிப்புயல் இனியவன்
    தேனிலும் இனியது காதலே
    கவிப்புயல் இனியவன்
    உனக்கென்ன -நீ
    கண் சிமிட்டி விட்டு .....
    சென்று விட்டாய் ....!!!

    என் இதயம் ....
    இறந்து பிறந்து ....
    துடிக்கும் வேதனையை ....
    எப்படி அறிவாய் .....?

    &
    கவிப்புயல் இனியவன்
    தேனிலும் இனியது காதலே
    கவிப்புயல் இனியவன்
    நீ
    தாவணியில் வரும்
    போது -தாவும்
    என் மனம்
    சேலையில் வரும்
    போது
    செத்தே போகிறேன்....!!!

    அதிகாலை சூரியன்
    வரும் போது பூக்கள்
    மலர்வதுபோல்
    நீ வரும்போது
    நான் மலர்கிறேன் ...!!!

    &
    கவிப்புயல் இனியவன்
    தேனிலும் இனியது காதலே
    கவிப்புயல் இனியவன்
    ஓடுகின்ற நீரில்
    ஒட்டி நின்று இரைதேடும்
    மீன் குஞ்சுபோல் ...!!!

    வாடிவரும் மலரில் ...
    கடைசித்துளி தேன் போல ...
    சின்ன நம்பிக்கையுடன் ....
    உன் காதலில் .....!!!

    ஏக்கமும் துடிப்பும் ....
    காதலின் இரு கண்கள் ....
    அதனால் தான் ....
    தேனிலும் இனியது காதல் ....!!!

    &
    கவிப்புயல் இனியவன்
    தேனிலும் இனியது காதலே 08
    கவிப்புயல் இனியவன்
    உனக்கு ....
    நான் கிறுக்குவது ....
    எல்லாம் கவிதை ....
    என்கிறாய் .......!!!

    நீ
    எனக்குக் கொடுக்கும்
    காதல் தான் கவிதை ...
    அதை உணர்வாயா ....?

    கவிதையை ..
    நீ ரசிக்க ரசிக்க
    என் கவிதை
    உயிர் பெறுகிறது ..!!!

    ^
    தேனிலும் இனியது காதல்
    கவிப்புயல் இனியவன்
    கவிப்புயல் இனியவன்
    என் கவிதைகள் ....
    உன்னை காந்தமாக ....
    கவர்கிறது என்கிறாய் ....
    அதில் என்ன சந்தேகம் ....?

    துருப்பிடித்து இருந்த ....
    என் இரும்பு இதயத்தை .....
    காந்த கண்ணால் கவர்ந்த ....
    உன் கண்கள் தான் ....
    காரணம் ......!!!

    &
    கவிப்புயல் இனியவன்
    தேனிலும் இனியது காதலே
    காதல் கவிதை
    கவிப்புயல் இனியவன்
    முள் .............
    மேல் தூங்கிய .....
    என்னை பூக்களின் ....
    மேல் தூங்க வைத்தவள் ....
    நீ ....................................!!!

    வாழ்க்கை என்றால் .....
    ஆனந்தம் இருக்கும் .....
    அந்த அத்திவாரத்தை .....
    பலமாக போட்டவள் .......
    நீ ...................................!!!

    &
    கவிப்புயல் இனியவன்
    தேனிலும் இனியது காதலே
    காதல் கவிதை
    கவிப்புயல் இனியவன்
    மனிதன் .....
    சில நிமிடங்கள் ....
    நினைவுகளை இழந்தால் ....
    அவன் இறக்கிறான் ....
    என்கிறது விஞ்ஞானம் ....!!!

    உன் நினைவுகள் ....
    ஒவ்வொரு நொடியும் .....
    என்னை கொல்கிறது.....
    இதை விஞ்ஞானம் ....
    ஏன் விளக்கவில்லை .....?

    &
    கவிப்புயல் இனியவன்
    தேனிலும் இனியது காதலே
    காதல் கவிதை
    கவிப்புயல் இனியவன்
    என்
    காதல் கவிதையை....
    புகைப்படம் போட்டு ....
    வர்ணிக்கமாட்டேன் .....
    என்னவளின் அழகுக்கு ....
    ஒரு புகைப்படமும் .....
    கிடைக்கவில்லை ....!!!

    ஒவ்வொரு
    புகைபபடத்தையும்.....
    பார்க்கின்ற போதெல்லாம் ....
    என்னவளின் ஒவ்வொரு ....
    அழகு குறைவாக இருக்கிறது ....!!!

    &
    கவிப்புயல் இனியவன்
    தேனிலும் இனியது காதலே
    காதல் கவிதை
    கவிப்புயல் இனியவன்
    இதயத்தில் இருக்கும் .....
    என்னவளை பூவாக ....
    பார்க்கமாட்டேன் ....
    வாடிக்கொண்டிருக்கும் ....
    வலியை தாங்கி கொள்ள ....
    மாட்டேன் ........!!!

    என் இதயத்தின் ....
    ஆணி வேர் அவள் .....
    தானும் வாடாமல் .....
    என்னையும் வாழ ...
    வைக்கிறாள் ...............!!!

    &
    கவிப்புயல் இனியவன்
    தேனிலும் இனியது காதலே
    காதல் கவிதை
    முரளிராஜா
    சிறப்பாக உள்ளது தங்கள் கவிதை
    கவிப்புயல் இனியவன்
    இந்த சுகம் போதும் அன்பே
    -------------
    அதிகாலை வேளை....
    அகிலமே அமைதியாய் ...
    இரு விழியை அகன்றேன் ...
    வான் குருவிகள் வானிசை ..
    சில்லென்ற காற்று உடல் பட ...
    எனைமறந்து உன்னை .....
    நினைத்தேன் ...

    (இந்த சுகம் போதும் அன்பே ...)

    தண்ணிரை மோர்ந்தேன் ....
    பன்னீரை போல் உன் மென்மை..
    ஒருதுளி உடலில் பட ...
    இணைந்துவிட்டேன் உன் ...
    நினைவில் ......

    (இந்த சுகம் போதும் அன்பே ...)

    ஒற்றையடி பாதையிலே
    ஓற்றைசடை முடி தேடி ...
    பற்றைக்குள் பதுங்கி இருக்க ...
    பற்றை செடிகள் ஆடியது ...
    காற்று அசைக்க வில்லை ..
    என் இதய துடிப்பு அசைத்தத்தடி ...!!

    (இந்த சுகம் போதும் அன்பே ...)

    கண் மூடினால் கனவாய் ..
    கண் திறந்தால் நினையாய் ...
    கனவில் வந்து நினைவை இழப்பதா ...?
    நினைவில் வந்து கனவை இழப்பதா ...?
    வந்தது உன் குறுஞ்செய்தி ...
    நான் தூங்கப்போகிறேன் நீ ரெடியா ..?
    கனவில் வர நான் தயார் என்று ...!!!

    (இந்த சுகம் போதும் அன்பே ...)

    &
    கவிப்புயல் இனியவன்
    தேனிலும் இனியது காதலே
    காதல் கவிதை
    கவிப்புயல் இனியவன்
    என்னவளின் .....
    இடையில் மடிப்பு அழகு ...
    நடையில் சுவடு அழகு ...
    சடையில் பூ அழகு ...
    விழியில் மை அழகு ...!!!

    பேச்சில் வார்த்தை அழகு ...
    மூச்சில் காற்றழகு ..
    பார்வையில் வீச்சழகு!

    சொல்லழகு...
    பல்லழகு...
    உள்ளம் அழகு...
    புருவ வில்லழகு....!!!

    காலழகு...
    மேலழகு...
    கண்ணழகு...
    மெய் அழகு,.....
    அவளை வர்ணிக்கும்
    கவிதை அவளைவிட ...
    அழகு ............!!!

    &
    கவிப்புயல் இனியவன்
    தேனிலும் இனியது காதலே
    காதல் கவிதை
    கவிப்புயல் இனியவன்
    உன் ....
    இமையெனும் முள்பட்டு..
    என் ......
    கண்ணெனும் ரோஜா...
    கலங்கியது ....
    அதிலும் ஒரு சுகம்..
    இருக்கத்தான் ...
    செய்கிறது கண்ணே...!!!

    &
    கவிப்புயல் இனியவன்
    தேனிலும் இனியது காதலே
    காதல் கவிதை
    கவிப்புயல் இனியவன்
    உயிர் ...
    கொண்டு எழுதுகிறேன் ..
    உயிர் ....
    துடிப்பாய் அமைகிறது கவிதை ..!!!

    நான் .....
    இன்பமாக இருக்கும் போது ..
    நாடி ....
    நரம்பை வரிகளாக்கி......
    எழுதுகிறேன்....!!!

    நான் ....
    துன்ப படும் போது ...
    நாள நரம்பை வரிகளாக்கி
    எழுதுகிறேன்.......!!!

    நிகழ்கால நினைவுகளை ..
    இதயத்தின் ஓசைகொண்டு ..
    எழுதுகிறேன்.....!!!

    கடந்த கால நொடிகளை ..
    சுடும் மூச்சின் துளிகளை...
    கொண்டு எழுதுகிறேன்.....!!!

    நான் ...
    இறக்கும் வரை...
    கவிதை எழுதுவேன்...
    நான் இறந்தபின்னும்...
    கவிதை எழுதுவான்....
    என் நண்பன் ...!!!

    கவிஞனுக்குத்தான் .....
    இறப்பு உண்டு ..!!!
    கவிதைக்கு இல்லையே ...!!!

    ^
    கவிப்புயல் இனியவன்
    கவிப்புயல் இனியவன்
    @முரளிராஜா wrote:
    சிறப்பாக உள்ளது தங்கள் கவிதை

    கருத்துக்கு நன்றி நன்றி
    கவிப்புயல் இனியவன்
    ஒரு நாள் உன்னை ......
    காணவில்லை ..
    என்றால் ஒரு வருடம்....
    காணாததுபோல் ......
    இருக்கிறது...
    நீயோ ஒருசொல்லை...
    மௌனமாக .........
    வைத்திருக்கிறாய் .....!

    பிறவி முழுவதும்....
    வேண்டுமானாலும் ....
    காத்திருக்கிறேன்...
    உனக்காக....
    என்னை நீ விரும்புகிறேன்...
    என்று சொல்லும்
    ஒரு வார்த்தைக்காக.....!!!

    &
    கவிப்புயல் இனியவன்
    தேனிலும் இனியது காதலே
    காதல் கவிதை
    கவிப்புயல் இனியவன்
    பிரிந்து சென்ற உன்னை
    நினைத்து கலங்குவதா…..?
    பிரியாத உன் நினைவுகளை
    நினைத்து ஏங்குவதா…….?

    இதயத்தில் வசிப்பவளே...
    நீ சந்தோசமாக இருக்கும் .....
    தருணம் என்னை அறியாமல் ....
    சிரிக்கிறேன் .........
    நீ சோகமாய் இருக்கும் ....
    போது என்னை அறியாமல் ....
    அழுகிறேன் ......!!!

    &
    கவிப்புயல் இனியவன்
    தேனிலும் இனியது காதலே
    காதல் கவிதை
    கவிப்புயல் இனியவன்
    அவள் மெல்ல கண் ...
    அசைத்தாள் நான் .....
    அகராதியெல்லாம் ....
    தேடுகிறேன் .......!!!

    காதலில்
    தான் கண்ணால் .....
    ஒருவரை காயப்படுத்த .....
    முடிகிறது .....!!!

    காதலுக்கு உடல் ....
    அழகு தேவையில்லை ....
    கண் அழகு போதும் ....!!!

    &
    கவிப்புயல் இனியவன்
    தேனிலும் இனியது காதலே
    காதல் கவிதை 21
    கவிப்புயல் இனியவன்
    சித்திரமே என் சிங்காரியே .....!!!
    ------
    இதயத்தில் சிற்பமாய் .....
    சிந்தனையில் சித்திரமாய் .....
    நிந்தையில் இருப்பவளே .....
    சித்திரமே என் சிங்காரியே .....!!!

    செந்தேன் சிந்தும் .....
    உதட்டழகியே ......
    உள்ளத்தில் முழுநிலவாய் ......
    பிரகாசிப்பவளே ......
    சிலம்பே என் சிலப்பதிகாரமே......
    வந்தேன் திகைத்தேன் தந்தேன் ....
    இதயத்தை .........!!!

    அல்லியை போல் அள்ளி ....
    கொள்வாயா -இல்லையேல் ....
    கீரையை போல் கிள்ளி ....
    எறிவாயா.......................?

    &
    கவிப்புயல் இனியவன்
    தேனிலும் இனியது காதலே
    காதல் கவிதை 22
    கவிப்புயல் இனியவன்
    நட நட வென கால்கள் நடக்க .......
    பட பட வென இதயம் துடிக்க ........
    சட சட வென வாய் பேச ......
    மட மட வென வந்து போனவளே,,,,,,!!!

    மல மல வென இதயம் வலிக்க .....
    சல சல வென கண்கள் கலங்க .....
    கிடு கிடு வென உடல் நடுங்க ......
    திடு திடு வென திகைத்து நிற்கிறேன் .....!!!

    சின்ன சின்ன ஆசைகள் .....
    மெல்ல மெல்ல வளருதடி .......
    தள்ளி தள்ளி போகாதே .......
    கிள்ளி கிள்ளி பேசி மகிழ்வோம் வா ......!!!

    &
    கவிப்புயல் இனியவன்
    தேனிலும் இனியது காதலே
    காதல் கவிதை 23

    Comments

    வருட பிரபல கவிதை

    89-100) வலிக்கும் இதயம்

    ஐந்து வரி கவிதைகள் 17

    முள்ளில் மலரும் பூக்கள்(60)

    பஞ்ச வர்ண கவிதைகள்

    முள்ளில் மலரும் பூக்கள்(62)

    முள்ளில் மலர்ந்த பூக்கள்(45)

    4) வலிக்கும் இதயத்தின் கவிதை