Skip to main content

முள்ளில் மலரும் பூக்கள்(60)

 

கவிப்புயல் இனியவன்
நீ 
யாருக்காகவோ ....
பிறந்தவள் என்றாலும் .....
நான் ....
உனக்காக பிறந்தவள் ....!!!

காதல் தோல்வி ....
கண்டவர்களின் .....
பட்டியலில் என் ...
பெயர்தான் முதல் .....
நீயும் தப்பமுடியாது .....!!!

காதலுக்கு ....
அழகழகான முகமூடி ....
விற்பவள்  - நீ ........!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவி நாட்டியரசர் 
காதல் கவி நேசன் 
இனியவன்
கவிப்புயல் இனியவன்
இதயத்தை சிதைப்பது .....
எப்படியென்பதை .....
உன்னிடம் ....
கற்று கொள்ளப்போகிறேன் ......!!!

காதலர் தினத்தை .....
கொண்டாடும் காதலர்களே ......
காதல் தோல்விக்கு .....
எப்போது நாள் .....?

உன்னிடம் காதலை .....
சொல்லாமல் விட்டிருந்தால்.....
சந்தோசமாய் இருந்திருப்பேன் ....!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை - 1046
^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவி நாட்டியரசர் 
காதல் கவி நேசன் 
இனியவன்
கவிப்புயல் இனியவன்
காதலில் நான் ......
மூலவேர் - நீயோ.....
இலை ஒரு நாள்.....
உதிர்ந்து விழுவாய்........!!!

நீ
பனிக்கட்டியில் உருவாகிய.....
கப்பல் தெரியாமல் உன்னில்......
பயணம் செய்துவிட்டேன்.......!!!

என் காதல் தீபமே........
உன்னை அணைத்தேன்........
அணைந்தே விட்டாயே......!!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நீயும் காதல்......
சிறகு கொண்ட பறவை.....
பருந்தல்ல......
என்னோடு பறந்து வர.....
தயங்குகிறாய்.....!!!

காதலில் 
அதிகமாக எரியாதே....
சாம்பலாகி விடுவாய்
உலகம் ஊதியே மறைத்து....
விடும்............!!!

காதலை ....
உண் - உன் காதல்.....
நம் காதல் ஆகிவிடும்....!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1048
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம் 
-------------------------------------------------------

பலருக்கு கஸல் கவிதை என்றால் என்ன ...?
என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது .அதை புரியாமல் 
வாசித்தால் இந்த கவிதையில் சுவாரிஸம் இருக்காது .
பொதுவாக கஸல் காதல் வலியை சொல்லும் கவிதை 
முறை . ( மற்ற வகைகளும் எழுதலாம் )

இதில் 3 சந்தங்கள் குறைந்தது எழுதணும் 
( 5 .7 வகையிலும் எழுதலாம் ) ஒரு சந்தத்துக்கும் 
மற்றையத்துக்கும் தொடர்பு வர கூடாது .

அதிக சொற்கள் பயன்படுத்த கூடாது 
ஒரு வரி நேராக (+) இருந்தால் மற்ற வரி எதிராக இருக்கணும் (-)
3 சாந்தமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படக்கூடாது 
ஆனால் 3 பத்தியும் வெளிப்பதும் தாக்கம் ஒரே கருத்தாக இருக்க வேண்டும் ....

உதாரணத்துக்கு ஒரு கவிதை 
-----
வலமிருந்து ....
இடமாக காதல் ...
தேவதையை சுற்றி ....
வரவேண்டும் .....(+)
நம் காதல் தோஷம் ....
இடமிருந்து வலமாக ....
சுற்றுகிறேன் .......!!!(-)
-----  01
வாடி விழும் பூவின் ....
நெத்து மரமாகி ....
மீண்டும் பூக்கும் ...(+)
நீ  வாடித்தான் ....
விழுந்தாய் ......
பூவின் மென்மை கூட .....
உன்னில் இல்லை ....!!!(-)
-----02
அடுத்த ஜென்மத்தில் ....
என் இதயத்தை ....
ஈரமாக படைக்காதே ...(-)
வீரமாக படைத்து விடு ....!!!(+)
-----03
&
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
இதயத்தின் வேலை .....
துடிப்பது மட்டுமல்ல....
துடிக்கவும் வைக்கணும்.....!!!

எவ்வளவு தான் ....
உன்னை சுற்றி வந்தாலும்....
நிமிட முள் போல்......
நீதான் முந்திக்கொண்டு
செல்கிறாய் என்னை ......
கவனிக்காமல்.......!!!

இதயத்துக்குள்.....
காதல் யாரையும் கேட்டு.....
வருவதில்லை......
அப்புறம் எதற்கு......
போகும்போது 
கவலைப்படுகிறீர்கள் ......!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1049
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உன் 
தலை குனிவின் .....
அர்த்தமென்ன....
வெட்கமா....?
வெறுப்பா.....?

காதலால்.....
கோலம் போடும் ....
போதெல்லாம்.......
கண்ணீரால்.......
அழித்துவிடுகிறாய்......!!!

காதலை...
மறைத்து மறைத்து....
வைத்தே மறைந்து....
போய்விட்டாய்......!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1050
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
எதிரும் புதிருமாய் .....
காதலில் பேசினாய் ....
நீரும் நெருப்புமாய் ....
அணைந்துவிட்டோம் ....!!!

முள்ளும் மலருமாய் .....
உன் நினைவுகள் .....
இரவும் பகலும் .....
வந்து கொல்கிறது.........!!!

வாழ்க்கை 
மேடு பள்ளம் தான் ....
அதற்காக பள்ளத்திலேயே .....
வாழ்வதா ......?

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1051
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சொற்களால் ....
கவிமாலை தொகுக்கிறேன் .....
நீ 
இதழ்களாய் உதிர்கிறாய் ....!!!

உன் 
புன்னகை அவ்வளவு ....
கொடுமையா ......?
இதயத்தில் ஒளியே ....
இல்லாமல் போகிட்டுதே ....!!!
நீ 
என்னை நோக்கி வருகிறாய் .....
என் இதய கதவு தானாக 
முடுக்கிறது .....!!!
&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1052
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
காதலுக்கு முன் .....
நிம்மதி .....
காதலுக்கு பின் ....
எங்கே நிம்மதி ....?

இன்று 
உன் காதல் முடிவு ....
பூவா தலையா ....?
பதட்டம் ............!!!

என் கவிதையில் ....
நீ பயன் பெறவில்லை .....
காதலர்கள் .....
பயன் படுகிறார்கள் .....!!!

&^&

முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1053
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
காதலில் தோற்றவர்கள் .....
காதலை விமர்சிக்க ....
கூடாது ....................!!!

நீ 
மின்னலுக்கு ......
பிறந்தவள் ....
இதயத்தை கருக்கி .....
விட்டாய் ...............!!!

நீ 
நாணத்தால் தலை .....
குனிகிறாய் என்று .....
நினைத்தேன் ........
காதல் நாணயம் .....
இல்லாமல் குனிந்து ...
இருக்கிறாய் ........!!!

&

முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1054
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
என் 
தப்பு தான் -என் 
கவிதைகள் உனக்கு ....
புரியும் என்று நான் ....
புரிந்தது தவறுதான் .....!!!

நீ 
என்னை பற்றி ....
ஏதும் சொல்லு கவலை ....
இல்லை கவிதையை .....
காயப்படுத்தாதே .......!!!

நான் மின் ஒளி ....
நீ எண்ணெய் விளக்கு ....
என்றாலும் ......
நீ புனிதமானவள் ........!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1055
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உன் 
திருமண மாலையில் ....
நினைவுகளாய் மணக்கும் ...
நார் - நான் .......!!!

என்னை உன்னிடம் ...
இருந்து பிரிக்க முடியாது ....
நீ இதயத்தில் அல்லவா .....
இருக்கிறாய் .......!!!

உன் 
முகத்தை மூடி வை ....
என் இதயம் வெளியே .....
நடமாடப்போகிறது ......!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1056
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
என் கவிதையில் ....
முதல் வரியும் நீ 
முதன்மை வரியும் நீ 
முடிவுரையும் நீ ......!!!

நீ 
தூக்கி எறிந்தது .....
ரோஜா இல்லை .....
இதயத்தின் மறு.....
வடிவத்தை ..............!!!

வெறுமையாக ......
பிறந்து சுமையோடு ....
சாக வைக்கும் .....
காதல் ..............!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1057
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நீ 
தீ பந்தமா ....?
தீபமா .....?
விரைவாக சொல் ....!!!

வாடி விழுத்த ....
பூவின் காம்பில் ....
மீண்டும் பூப்பதில்லை ....
காம்புக்கு பூவினால் 
காதல் தோல்வி .......!!!

காதல் பாதையில் ......
நீ 
குறுக்கு பாதையா ...?
நீண்ட பாதையா ....?

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1058
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நீ 
தந்த காதல் மலரை 
கண்ணீர் விட்டு ....
வளர்க்கிறேன் .....!!!

நீ 
என் இதய தேன்....
கூட்டில் ராணி தேனீ ....
உனக்கும் சேர்த்து ....
தேன் தருகிறேன் ....
போதையில் மயங்கி ....
என்னை மறந்து விடாதே ....!!!

உன்னால் இறந்த .....
காலத்தில் வாழ்கிறேன் .....
நிகழ் கால இன்பத்தை .....
தொலைத்து விட்டேன் ....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1059
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நீ 
கானல் நீர் ....
உன்னை துரத்தும் ....
கலை மான் நான் ....!!!

என்னை 
இதயத்தில் வைத்து 
மூச்சு திணறுகிறாய் ....
முடியாவிட்டால் ....
என்னை எடுத்து விடு ....!!!

கருத்தை பிரித்த .....
எழுத்தைப்போல் ....
சடப்பொருளாய் ....
நான் வாழ்கிறேன் ....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1060
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நான் ....
உறுமீன் ....
நீ 
கொக்கு .....
உனக்காக ....
காத்திருக்கிறேன் ....
கொத்தி சென்று விடு ....!!!

காதலில் ....
கண்கள் விழித்திருக்கும் ....
போதெல்லாம் .....
துன்பம் .....
கண் மூடியிருக்கும் ....
போதெல்லாம் 
இன்பம் ......!!!

என்னை ....
சந்திரனாக ஏற்று கொள்....
உன் காதல் ஒளியில் ....
வாழ்ந்துவிடுகிறேன் .....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1061
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
காதல் சமாதியில் .....
தவறாமல் தீபம் ....
ஏற்றும் உன் கடமை ....
உணர்வுக்கு நன்றி ....!!!

கவிஞர்களுக்கு .....
காதல் உணர்வு அதிகம் ....
காதல் அவசியம் இல்லை ....!!!

நீ 
என்னை காதல் ....
செய்கிறாய் .....
நான் உன்னையும் ....
காதலையும் காதல் ...
செய்கிறேன் .....
அதனால் தான் .....
எனக்கு வலி அதிகம் ....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

பஞ்ச வர்ண கவிதைகள்

முள்ளில் மலரும் பூக்கள்(62)

முள்ளில் மலர்ந்த பூக்கள்(45)

4) வலிக்கும் இதயத்தின் கவிதை