Skip to main content

132-154) வலிக்கும் இதயம்

 

கவிப்புயல் இனியவன்
பல சோதனைகள்...
சந்தித்து பல ...
வேதனையையும் ....
சந்தித்தேன் ....
அத்தனைக்கும் தீர்வு
கண்டேன் ....
நீ காதல் செய்ததால் ....!!!

நீ ஏன் என்னை
பிரிந்தாய் என்று
இன்றுவரை
தீர்வு காணவில்லை ...!!!

எல்லோரும் வெற்றி
பெற்றால் -காதலை ...
யார் காதலிப்பார்கள் ....
என்பதற்காக நீ ....
என்னை பிரிந்தாயோ ....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நாணயத்துக்கு 
இரு பக்கம் போல் 
நான் தலை , நீ  பூ.....!!!

புத்தகத்துக்கு பண்பு போல் 
நான் எழுத்து நீ வரிகள் ...!!!

இதயத்துக்கு இரு அறை
நான்வ லது நீ ,இடது....!!!

காதல் பிரிவுக்கு காரணம்
என் அதிக எதிர்பார்ப்பு ....
உன் அதிக நிராகரிப்பு ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உன்னை கடவுளாக ....
நினைத்து கவிதை ....
எழுதுகிறேன் -நீயோ ....
கடவுளை வணங்க ....
கோயில் போகணும் ....
என்கிறாய் ......!!!

நான் கவிதை ....
எழுதும்போது நீ ....
அருகில் இருக்கவேண்டும் ....
என்று ஆசைப்படுகிறேன் ....
நீயோ அக்கறையில்லாமல் ....
இருக்கிறாய் .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
ஒருபுறம் நினைவு
மறுபுறம் கனவு
நீ மகுடி
நான் பாம்பு
படாத பாடு படுகிறேன்....!!!

நீ அழுதத்தை
நம்பிவிட்டேன்
கண்ணீர் என்று ....!!!
கவிப்புயல் இனியவன்
எவரோடும் வாழலாம் ....
என்றிருந்திருந்தால் ....
காதல் தேவையில்லை ....!!!

உன்னோடு மட்டுமே ....
நான் வாழவேண்டும் ....
உனக்காகவே நான் ....
வாழவேண்டும் .....
என்பதால்  உன்னை....
காதலித்தேன் .... !!!

இப்போ ....
உனக்காகவும் வாழ ....
முடியவில்லை .....
எனக்காக வாழவும் ....
முடியவில்லை ..........!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பிரிவை விட கொடுமை .....
காதலில் மௌனம் ......
மௌனத்தை விட கொடுமை ....
காதலில் சந்தேகம் ....!!!

உன்னை கனவில் ....
மட்டும் காதலித்திருந்தால் ....
கலங்கியிருக்க மாட்டேன்....
நினைவில் மட்டும் ....
காதலித்திருந்தாலும் .....
கலங்கியிருக்க மாட்டேன்....!!!

உன்னை உயிராய் 
காற்றாய் காதலித்து .....
அவஸ்தைப்படுகிறேன் .....!!!

 ^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நீ 
என்ன இருதய மாற்று 
சிகிச்சையாசெய்து 
விட்டாய் ..?

இத்தனைகாலம் பழகி 
எத்தனையோ நினைவுகளை 
தந்துவிட்டு ..

எதுவுமே இல்லததுபோல் ..
தலையை குனிந்துகொண்டோ 
செல்லுகிராயே நீ என்ன ?
இருதய மாற்று ....
சிகிச்சையா செய்து விட்டாய் ?
கவிப்புயல் இனியவன்
ஏனடி 
பிரிந்த பின் இவ்வளவு 
அன்பு காட்டுகிறாய் .................?

 உன்னோடு 
இருந்தபோது இவ்வளவு 
அன்பை காட்டவிலையே .......?

இருந்த போது 
நான் பட்ட துன்பத்தை விட 
பிரிந்த பின் துன்பம் 
சுகமாக உள்ளது ....!!!

பிரிந்து 
இருந்து அன்பு காட்ட
வேண்டாம்!

நீ அருகில் 
இருந்து சண்டை போடு
அது போதும்!!!...
கவிப்புயல் இனியவன்
காதலை 
சொல்லவேண்டிய ....
நேரத்தில் சொல்லி விடு ....
இல்லையேல் காலம் ....
முழுவதும் காதலால் ....
காயப்படுவாய் .....!!!

என்றோ ஒருநாள் ...
சொல்லாமல் விட்ட காதல் ....
இதயத்துக்குள் முள்ளாய் ....
குத்திக்கொண்டே இருக்கும் .....!!!

காதலை சொல்லி வேதனை ....
பட்டவர்களை விட  காதலை ....
சொல்லாமல் வேதனை ....
பட்டவர்களே அதிகம் .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கைக்கு எட்டியது ....
வாய்க்கு எட்டவில்லை ...
என்பதுபோல் தான் ....
என் காதலும் .....
திருமண அழைப்பில் ....!!!

கை கோர்க்க முடிந்த ....
எனக்கு உன்னோடு ...
மாலை கோர்க்க ....
முடியவில்லை .............!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நேரம் 
இருக்கின்ற போது ....
என்னுடன் பேசுகிறேன் ...
என்கிறாய் ......
நேரம் காலம் எல்லாம் ....
உன்னையே நினைக்கும் ....
என்னிடம் சொல்கிறாயே .....!!!

ஒரு
முறை என்னைப்போல் .....
துடித்துப்பார்  -காதலின் 
துடிப்பும் வலியும் அப்போது ....
உனக்கு புரியும் ......!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
முயற்சிக்கிறேன் ....
உன்னை கண்டவுடன் ....
ஒரு பொய் சிரிப்பு சிரிக்க ....
உதட்டுக்கு முன்னரே ....
முந்தி கொண்டு ..
கண்ணீர் விட்டுவிடுகிறது .....
கண்கள் .......!!!

உன்னை நினைக்க  .....
கவலையாக இருக்கிறது......
என் நினைவுகளை எப்படி ....
மறக்கப்போகிறாய் ....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கனவில் வந்து ...
கலைந்து விட்டாள்....
நினைவை தந்து ....
நீங்கிவிட்டாள்....

உன்னை கனவில் ....
மட்டும் காதலித்திருந்தால் ....
கலங்கியிருக்க மாட்டேன்....
நினைவில் மட்டும் ....
காதலித்திருந்தாலும் .....
வருந்த மாடடேன் ....
உயிராக இருக்கிறேன் ....
முடிந்தால் எடுத்துவிடு....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கூலிக்கும் காதல் வரும்.....!!!
--------
கூலி வேலை செய்தேன்........
உன் வீட்டில் ............................
யார் கண்டது நீ .....................
கண்ணில் படுவாய் -என்று ? 

கூலிக்கும் உன்மீது ஆசை ....
உனக்கும் தான் .................... 
கூடி ஒருநாள்கூட போசமுடியாத .......
தினக்கூலினான் ...............
வீட்டுவேலை முடிந்ததும் ..............
முடிந்தது என் காதல் ...............!!!

கண்ணே முடியவில்லை ..............
உன் நினைவுகளை மறக்க ...............
முடியவில்லை யாருக்கும் சொல்ல . .............
கூலிக்கு தேவையா.............? 
இந்தக்காதல் என்பார்கள்........!!!

கூலிக்கும் இதயம் இருக்கு ............
என்று ஏன் புரிவதில்லை ............
இந்த உலகத்துக்கு ..................
கூலிக்கும் காதல் வரும் -என்று .............
இன்னுமொரு கூலிக்கு புரிந்தால் .............
போதும் - ஆனால் கூலியே .....
காதல் செய்யாதே .........!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
அன்று .....
கண் சிமிட்டாமல் 
உன்னைப் பார்க்க 
ஆசைப் பட்டேன்... 
பார்த்தேன் ......!!!

இன்று .....
இப்போதெல்லாம் ....
கண் சிமிட்டும் நேரமாவது ...
உன்னைப் பார்க்க ....
ஆசைப் படுகிறேன்...
கண்ணீர் மறைக்கிறது ..
உன் உருவத்தை .....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தோல்விக்கு விடுதலை ...
வெல்லும் வரை ....!!!

கண்ணீருக்கு விடுதலை ...
சிரிக்கும் வரை ....!!!

பூக்களில் அழகிருக்கும் ....
உதிரும் வரை .....!!!

நிலவு அழகிருக்கும் ... 
மறையும் வரை ....!!!

மரணம் வரை தான் ...
காதலிருக்கும்....
மரணத்தின் பின்னும்... 
நட்பிருக்கும் ....!!!
கவிப்புயல் இனியவன்
நீ அருகில் ...
இருக்கும் போது ...
காதல் என்றால்... 
புரிவதில்லை...! 

பேசுவேன் .....
தொடர்பில்லாமல் .....
தொடர்ந்து பேசுவேன் .....
உன்னை பிரிந்திருக்கும் .....
ஒவ்வொரு நொடியும் ....
காதலை தவிர வேறு ஏதும் 
தெரிவதில்லை...!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நினைக்கும் போது
உன் அருகினில் இருப்பவன்..
அல்ல நான்...!!!

நீ 
அருகினில் இல்லாத போதும்....
உன்னையே...
நினைத்துக்கொண்டு இருப்பவன்..
இருப்பவன் தான் நான் ...!!!

அழும் போது கண்ணீர்.. 
துடைப்பதில்லை ...
காதல்...!!!
கண்ணீரை ஏற்படுத்தாமல் ..
இருப்பதுதான் காதல் ...!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உன்னைப்பார்க்க 
நிலா ஆசைப்படும் ....
நட்சத்திரங்கள் ஆசைப்படும் 
முகில்கள் ஆசைப்படும் 
பூக்கள் ஆசைப்படும் ...
நிலவும் ஆசைப்படும் ...!!!
*
*
அதுவெல்லாம் இருக்கட்டும் ...
என்னைப்பார்க்க நீ 
ஆசைப்படுகிறாயா ...?

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உனை பார்க்கும் போது
வார்த்தைகள் வரவில்லை !!!
உனை நினைக்கும் போது
கவிதையாக வருகிறது !!!

உனை வெறுத்ததாக சொன்னாலும் ..
மனம் என்னை வெறுக்கிறதே தவிர ....
உன்னை வெறுக்கிதில்லை ..
உனை மறக்க முயன்றும் என்னால்
உன் உருவம் மறைகிறது ..
நினைவை மறக்க முடியவில்லை !!!

விழிக்குள் பதிந்து இருக்கும் உன்.....
உருவத்தை கண்ணீரால் கூட ...
அழிக்க முடியவில்லை ...
கண்ட கனவுகள் மறக்க நினைக்கிறேன்
கனவுகள் போல் ஆகிவிட்ட காதலை 
நினைக்க விரும்புகிறேன் ...!!!

ரோஜாவாக பிறக்க வேண்டிய நான் ..
முள்ளாய் பிறந்துவிட்டேன் ...!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
சே.குமார்
கனவுகள் போலாகிவிட்ட காதலை நினைக்கவே விரும்புகிறேன்...

இதுதான் காதல்...

வலிக்கும் கவிதை வரிகள் அருமை,.
கவிப்புயல் இனியவன்
ஆசையாய் 
வாங்கி கொடுத்த....
கொலுசை கழற்றி தந்துவிட்டாய்......
ஆசையாய் எழுதிய கவிதையை ......
கிழித்தெறிந்துவிட்டாய்......
இவை உனக்கு சடப்பொருள்..... 
இவையெல்லாம் எனக்கு உயிர் .........!!!

கண்ணுக்குள் இருக்கும் - நீ 
எப்போதும் மறையகூடாது ....
என்பதற்காக கண்ணே 
மூடியதில்லை....
மூச்சு பயிற்சிசெய்ததில்லை ....
இதயத்தில் இருக்கும் நீ .....
மூச்சில்லாமல் தத்தளிப்பாய்....
என்பதற்காக......................!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
உன்னை ....
பிரிந்து வாழ முயற்சிக்கிறேன் .......
மறந்து வாழவும் முயற்சிக்கிறேன் .....
அதனால் நான் அடிக்கடி இறந்து ....
பிறக்கிறேன்..........!!!

உன்னை......
பிரிந்து வாழ்வதை காட்டிலும்.....
இறந்துவிடுவது நன்று என்று ...
அடிக்கடி ஜோசிப்பேன்.....
உன்னை அது காயப்படுத்தும்....
உன் வாழ்நாள் முழுவதும்....
உன்னை கொன்று விடும் என்பதால் .....
நான் கொஞ்சம் கொஞ்சமாய்....
இறக்கிறேன்.....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
இதயம் இருட்டாக .....
இருந்தாலும் காதல் .....
வெளிச்சமாக்கி .....
விடுகிறது ........!!!

இருட்டறையில்.......
தவிக்கும் குழந்தை ....
வீறிட்டு அழுவதுபோல்......
நானும் அழுகிறேன் .....
இதய விளக்கை .....
நூற்றத்துக்காக ......!!!

துடித்து கொண்டு ....
இருந்த என் இதயத்தை ....
துடி துடிக்க வைத்துவிட்டாய் .....!!!

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

பஞ்ச வர்ண கவிதைகள்

முள்ளில் மலரும் பூக்கள்(62)

முள்ளில் மலர்ந்த பூக்கள்(45)

4) வலிக்கும் இதயத்தின் கவிதை