Skip to main content

209-216) வலிக்கும் இதயம்


கொஞ்சம் கொஞ்சமாக 
மறந்து வருகிறேன் 
உன் முகத்தை ...!!!

மறக்க மறக்க 
ஊற்றாய் வருகிறது 
உன் நினைவுகள் ...!!!

காதல் என்றால் 
வலி இருக்கலாம் 
வலியே காதலாக 
இருக்குதடி என் வாழ்வில் ...!!!

கவிப்புயல் இனியவன்
நீ....
காதலை.... 
மறுத்த அந்த நொடி.....
இதயம் கல்லறை......
சென்றுவிட்டது.....!

மூச்சு மட்டும்.......
பேச்சுக்காக இயங்குது.....
தோற்றுப்போனாலும்.....
தேடிக்கொண்டிருக்கிறேன்.....
உன் அழைப்புக்காய்.....!

எனக்காக ஒருமுறை....
வந்துவிட்டு போ......
இல்லை வந்து என்னை.....
கொண்றுவிட்டு போ....!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
பதிவு -201
கவிப்புயல் இனியவன்
person
    கவிப்புயல் இனியவன்
    நீ ....
    என்னை விட்டு....
    பிரிந்து சென்று....
    விட்டாய்.......

    உனக்கும் சேர்த்து.....
    என் இதயம் வலிக்கும்...
    வலியை யார் அறிவர்......?

    என்னிடம்.....
    கொட்டிக்கிடந்த.....
    காதலையே உன்னால்.....
    புரிந்துகொள்ள 
    முடியவில்லை.......
    வலியையா .....
    புரியப்போகிறாய்.......?

    &
    வலிக்கும் இதயத்தின் கவிதை
    கவிப்புயல் இனியவன்
    பதிவு -202
    கவிப்புயல் இனியவன்
    என்னை 
    மன்னித்துவிடு .....
    என்று சொல்லும்போதே.....
    நான் இறந்துவிட்டேன்.......!

    இறைவா 
    மரணத்தை கொடு......
    அப்போதென்றாலும் ......
    அருகில் வருகிறாளா ..........
    பார்ப்போம்...!

    இதயத்தை .....
    உயிரோடு புதைத்தேன்......
    நீ எனக்கு இல்லையென்று.....
    முடிவாகியபின்........!

    &
    வலிக்கும் இதயத்தின் கவிதை
    கவிப்புயல் இனியவன்
    பதிவு - 203
    கவிப்புயல் இனியவன்
    பட்ட மரத்தில்
    பட்டாம் பூச்சிக்கு...
    என்ன வேலை....?

    என்னை.....
    பட்ட மரமாக்கி விட்டாய்.......
    இப்போ........
    பறக்கத்துடிக்கும்
    பட்டாம் பூச்சி -நீ.........!

    கனவுகளுக்கும்.....
    கற்பனைகளுக்கும் ......
    இந்த மரம் பொருத்தமில்லை ...
    தயவு செய்து.......
    மரத்தை மாற்றிவிடு ...!

    பிரிந்து சேரத்துடிக்கும் 
    இதயம் ............
    உடைந்த பானையின்.....
    முடிந்த கதைதான்....!

    @
    கவிப்புயல் இனியவன்
    வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
    கவிப்புயல் இனியவன்
    மறக்க நினைக்கிறேன்
    பலவற்றை ...
    நினைக்க விரும்புகிறேன்
    சிலவற்றை....!

    மறக்கவே முடியாதவை
    நினைக்கவே முடிந்தவை
    ஒன்றே ஒன்றுதான்
    நட்பு ....!

    தோள் கொடுக்க....
    உயிர் தோழன் நீ....
    இருக்கும் வரை...
    தோல்விகள்........!

    ஆயிரம் ஆயிரம்.....
    தோன்றினாலும்......
    துவண்டு விழமாடேன்
    உன் சுட்டு விரல்
    எனக்கு சுட்டிக்காட்டும்
    வெற்றியை

    Comments

    வருட பிரபல கவிதை

    தேனிலும் இனியது காதலே 23

    89-100) வலிக்கும் இதயம்

    ஐந்து வரி கவிதைகள் 17

    முள்ளில் மலரும் பூக்கள்(60)

    பஞ்ச வர்ண கவிதைகள்

    முள்ளில் மலரும் பூக்கள்(62)

    முள்ளில் மலர்ந்த பூக்கள்(45)

    4) வலிக்கும் இதயத்தின் கவிதை