Skip to main content

181-194) வலிக்கும் இதயம்

 உன் ........

காதலுக்கு நன்றி...........
என்னை விட்டு பிரிந்தாலும்.............
நீ தந்த காதல் என்னோடு.....
இருப்பதால் தான் நான்.......
உயிரோடு இருகிறேன்.............!

ஒரே ஒரு மாற்றம் ........
பனித்துளிபோல் சில்......
என்றிருந்த என் இதயத்தை.....
பாலவனமாக்கிவிட்டாய்........!

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 196
கவிப்புயல் இனியவன்
உடலால் நீ என்னை.....
பிரிந்தாலும்.......
இதயத்தில் பத்திரமாய்......
இருகிறாய்...........
காதல் தராசு ......
சமமாக இருகிறது...... !

காதலில் சேர்ந்து.....
வாழ்பவர்களும் ......
பிரிந்து வாழ்பவர்களும்.....
சமமாய் இருப்பதால்....
காதல் தராசு ......
சமமாக இருகிறது...... ! 

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 197
கவிப்புயல் இனியவன்
காதலில் தோற்ற இதயம்.....
மெழுகுதிரி போன்றது......
பிறர் முன்னால் சிரித்து.....
தன்னை வருத்தும்.......!

இதோ 
தெருவில் வாடிக்கிடக்கிறது......
நீ தூக்கியெறிந்த பூச்செண்டு......
பாவம் அதை நான் பறித்து....
உனக்கு தந்து அதன் இன்பதை.....
பிரித்துவிட்டேன்..........!

இரண்டு மலைகளுக்கு.....
நடுவே வடியும் நீர்போல்.....
உன் நினைவுக்கும் கனவுக்கும்.....
நடுவில் நான் அழுகிறேன்.......!

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 198
கவிப்புயல் இனியவன்
கண்களால் சித்திரம் ....
வரைந்தவள் .....
கண்ணீரால் சித்திரம் ....
வரைய வைக்கிறாள் ....!

$$$$$

மூச்சை நிறுத்தினால்..
மட்டுமே மரணம் இல்லை.
நீ பேச்சை நிறுத்தினாலும்.
மரணம் தான்......!

$$$$$

உயிர் விட்டு போகும் .....
உடலுக்காக விடும் ....
கண்ணீரை விட கொடுமை ...
உயிராய் காதலித்தவர் ,,,,
விட்டுப்பிரியும்போது ....
ஓரக்கண்ணில் வடியும் ...
சிறுதுளி கண்ணீர் ....!

^^^^^^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
எதற்காக.....
இதயத்தை முள்ளாய் ....
வைத்துக்கொண்டு ...
கண்ணை மலராய் ....
வீசுகிறாய் ....!

$$$$$

என் ......
காதல் நினைவு ....
உன் காதல் வலி...
எப்படி தாங்கும் 
என் இதயம் ....!

$$$$$

நீ 
வார்த்தையால் ....
காதல் செய்ததை ....
நான் இதயக்காதல் ....
காதல் செய்கிறாய்........
என்று நம்பி விட்டேன் ....!

^^^^^^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
[ltr]மனதை கவரும்[/ltr]
[ltr]காதலியாக பார்த்தேன்[/ltr]
[ltr]முடியவில்லை ....![/ltr]


[ltr]இதயத்தின் வலியை....[/ltr]
[ltr]கவிதையாக வடிக்கிறேன்....[/ltr]
[ltr]கவிதையை நேசிக்கும்....[/ltr]
[ltr]காதலியாக இருந்துவிடு.....[/ltr]
[ltr]உயிரே ....![/ltr]


[ltr]உன்னை நினைத்து கவிதை....[/ltr]
[ltr]எழுதும் போதுதானடி.....[/ltr]
[ltr]எழுத்து கருவி கூட .....[/ltr]
[ltr]கண்ணீர் விட முனைகிறது .....!!![/ltr]


[ltr]^^^[/ltr]
[ltr]வலிக்கும் இதயத்தின் கவிதைகள்[/ltr]
[ltr]கவிப்புயல் இனியவன்[/ltr]
கவிப்புயல் இனியவன்
நீ 
தந்த காதல் பிரிவுக்கு....
மிக்க நன்றி.....
நீ
இல்லாத போதும்.....
உன்னையே நினைக்கும்....
அளவுக்கு நினைவுகளை....
தந்துவிட்டு சென்றதற்கு........!

இதயத்தில் காயமில்லை.....
என்றாலும் வலிக்குதே.....
எங்கே கற்றுக்கொண்டாய்....
காயம் தராமல் வலியைதரும்....
வித்தையை.....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
[ltr]நீ [/ltr]
[ltr]என்னை மறந்துவிடு......[/ltr]
[ltr]என்று சொன்னபோதே.....[/ltr]
[ltr]நான் இறந்து விட்டேன்....![/ltr]


[ltr]உன்னை பிரிந்த பின் [/ltr]
[ltr]என் இறந்த உடலை ....[/ltr]
[ltr]நானே பார்கிறேன் ....![/ltr]


[ltr]என் [/ltr]
[ltr]இறந்த உடலுக்கு அருகில் [/ltr]
[ltr]நீயும் நிற்பதை நான் [/ltr]
[ltr]பார்க்கிறேன் .....![/ltr]


[ltr]இறந்தபின் என் ...[/ltr]
[ltr]உடலை பார்ப்பதும் ....[/ltr]
[ltr]நீ அருகில் இருப்பதையும் ....[/ltr]
[ltr]உயிரோடுபார்க்கும் ........[/ltr]
[ltr]முதல் மனிதன் ....[/ltr]
[ltr]நான் தான் .....![/ltr]


[ltr]^[/ltr]
[ltr]வலிக்கும் இதயத்தின் கவிதை [/ltr]
[ltr]கவிப்புயல் இனியவன்[/ltr]
கவிப்புயல் இனியவன்
என் 
மூச்சோடு மூச்சாய்......
இருந்தவளை காணவில்லை....
என் மூச்சு காற்றே.....
என்னவளை கண்டுபிடி.....!

எப்படி 
அவளை கண்டுபிடிப்பேன்.....
என்று அஞ்சாதே மூச்சே......
இந்த பிரபஞ்சத்தில்.......
என்னவளின் 
மூச்சு கண்ணீரோடு.......
கண்ணீரோடு கலந்திருக்கும்....!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 202
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
இசை இசை இசை
கவிப்புயல் இனியவன்
தகவல் அறியும் சட்டத்தின்......
மூலம்  கேட்கப்போகிறேன்......
நீ என்னை காதலிக்கிறாயா....?

தேச வழமை சட்டத்தில்...
உன்னை கைது செய்ய முடியது.....
தேக வழமை சட்டம் இருந்தால்.....
உன்னை கைதுசெய்யனும்......
இதயத்தை திருடிய குற்றத்துக்கு.....!

&
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கனவிலும் .........
நினைவாலும் ......
கொல்வது  போதாதென்று ......
மௌனத்தாலும் ......
கொல்கிறாய் ..........
தயவு செய்து நிஜமாய்......
கொண்றுவிடு .........!

என் குறைந்த பட்ச....
கோரிக்கை நீ வேண்டும் .....
அதிக  பட்சகோரிக்கை .....
நீயே  வேண்டும் ........
முடியாதுபோனால் ........
உன் காதல் வேண்டும் .....!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

பஞ்ச வர்ண கவிதைகள்

முள்ளில் மலரும் பூக்கள்(62)

முள்ளில் மலர்ந்த பூக்கள்(45)

4) வலிக்கும் இதயத்தின் கவிதை